யோக அறிவியலின் சாரம் முழுவதும் ஒருவரின் புரிதலை மேம்படுத்துவதுதான். ஒருவருடைய புரிந்து கொள்ளும் தன்மையை மேம்படுத்தாமல் படைத்தவனின் வழிமுறைகளை அறிந்திட முயற்சி செய்தால் அது எல்லாவிதமான முரண்பட்ட கருத்துக்களுக்கும் குழப்பங்களுக்கும் இட்டுச் செல்லும். தெளிவை அடைவதற்கு முயற்சி செய்வதைவிட உறுதியான நம்பிக்கை கொள்வதற்குத்தான் மனிதர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். கடவுளள் என் கையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் உங்களுக்கு உறுதியான நம்பிக்கை அளிக்கிறது. இந்த நம்பிக்கை தான் உலகத்தைப் பல்வேறு விதங்களில் சீரழித்துக் கொண்டிருக்கிறது. வெளிச் சூழ்நிலையை மாற்றுவதால் மட்டும் நமது வாழ்க்கையின் அடிப்படைத்தன்மை மாறுவதில்லை. உள்சூழ்நிலையை கவனிக்காவிடில் மனிதனின் அடிப்படைத்தன்மையை பொருட்படுத்தாவிடில் இந்த பூமியில் மனித வாழ்க்கை மாறாது. மகிச்சியாகவும் அமைதியாகவும் இருந்தால்தான் உங்கள் புத்திசாலித்தனம் வாழ்க்கையின் உயர்ந்த பரிமாணங்களை அணுகுவதற்கான திறன் பெறுகிறது. பொருள்தன்மைக்கு அப்பால் உள்ள பரிமாணத்தை அடையும் சாத்தியங்களை நோக்கி மலர்கிறது. இல்லையென்றால் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க அது திணறிக் கொண்டிருக்கிறது.

Sold Out